சோதனை என்ற பெயரில் வழிப்பறி; அரச்சலூர் எஸ்.ஐ. மீது எஸ்.பி. பாஜக புகார்

சோதனை என்ற பெயரில் வழிப்பறி; அரச்சலூர் எஸ்.ஐ.  மீது எஸ்.பி. பாஜக புகார்

அரச்சலூர் போலீஸ் எஸ்.ஐ. மீது பாரதிய ஜனதா கட்சியினர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரதிய ஜனதா விவசாயப் அணி சார்பில் ஈரோடு எஸ்.பி தங்கதுரையிடம் இன்று மாவட்ட விவசாய அணி தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் வந்து சந்தித்து மனு கொடுத்தார்கள்.

சோதனை என்ற பெயரில் வழிப்பறி; அரச்சலூர் எஸ்.ஐ.  மீது எஸ்.பி. பாஜக புகார்

அம்மனுவில், ’’அரச்சலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ . ஒருவர் அரச்சலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வாகன தணிக்கை என்ற பெயரில் பொதுமக்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் விவசாய விளை பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் உட்பட அனைத்தையும் சோதனை என்ற பெயரில் வழி மறித்து ஏதாவது விதிமீறல் எனக் காரணம் காட்டி சட்டத்துக்கு அப்பாற்பட்டு பணம் வசூல் செய்து வருகிறார்.

சட்டப்படியான அபராதம் கட்ட தயார் என வாகன உரிமையாளர்கள் சொன்னாலும் கூட சட்டத்துக்கு உட்பட்டு அதிகபட்ச தொகையை விதிப்பேன் என்று மிரட்டுகிறார். இதன் காரணமாக வாழைத்தார் வாங்கும் வியாபாரிகள், அரச்சலூர் பகுதியில் வாழைத்தார் வெட்டுவது என்றாலே பிரச்சினை வரும் என இந்த பகுதிக்கு வர பயப்படுகின்றனர். இதனால் வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்கதையாகி வருகிறது. எனவே தாங்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளனர்.

சோதனை என்ற பெயரில் வழிப்பறி; அரச்சலூர் எஸ்.ஐ.  மீது எஸ்.பி. பாஜக புகார்