தினகரன் குடும்ப பிரச்னையால் சந்தி சிரிக்கும் அரசியல் களம்!!!

தினகரன் குடும்ப பிரச்னையால் சந்தி  சிரிக்கும் அரசியல் களம்!!!

தினகரனுக்கு எதிராக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தேர்தல் வியூகம் வகுத்துள்ளது அமமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன் குடும்ப பிரச்னையால் சந்தி  சிரிக்கும் அரசியல் களம்!!!

தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் வருகை பரபரப்பாக பேசப்பட்டாலும் சில நாட்களிலேயே அந்த பரபரப்பு உப்பு சப்பு இல்லாமல் போனது. அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக சசிகலா கூறியதால் , அதிர்ச்சியடைந்த தினகரன் தேமுதிக, ஓவைசி உடன் கூட்டணி அமைத்துள்ளார். ஏற்கனவேகுடும்ப பிரச்னை ஒருபுறம், தேர்தல் களம் மறுபுறம் என மல்லுக்கட்டி வரும் தினகரனுக்கு கூடுதல் அழுத்தத்தை தருகிறாராம் சசிகலா சகோதரன் திவாகரன்.

தினகரன் குடும்ப பிரச்னையால் சந்தி  சிரிக்கும் அரசியல் களம்!!!

திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் கட்சி மதுரை வடக்கு தொகுதியில் வசந்தகுமார் என்பவரை களமிறக்கியுள்ளது. இவர் தினகரனின் தீவிர விசுவாசி. அதே தொகுதியில்தான் அமமுக சார்பில் ஜெயபால் போட்டியிடுகிறார். திமுக சார்பில் தளபதியும், பாஜக சார்பில் சரவணனும் களம் காண்கின்றனர். இந்த தொகுதியில் வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை. தினகரன் வேட்பளாரை விட ஒரு ஓட்டாவது அதிகம் வாங்கி விட வேண்டும் என்ற ‘உயரிய’ எண்ணத்தில் திவாகரன் களமிறங்கியுள்ளார்.

தினகரன் குடும்ப பிரச்னையால் சந்தி  சிரிக்கும் அரசியல் களம்!!!

சசிகலா சிறைக்கு சென்ற பிறகு திவாகரன் – தினகரன் இடையே ஏற்பட்ட மோதலில் உருவானது தான் அண்ணா திராவிடர் கழகம். சமீபத்தில் சசிகலா அரசியலில் இருந்து விலகியதற்கும் தினகரனின் அழுத்தம் தான் காரணம் என திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது குறிப்பிடதக்கது.