திருச்சி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை!

 
dead body

துறையூர் அருகே அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் - நாமக்கல் சாலை தேவரப்பம்பட்டி அரசு வனக் காப்புக்காடு அருகேயுள்ள பாலத்தின் கீழே இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள், ஜம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

trichy

அப்போது,  சடலமாக கிடந்த இளைஞருக்கு சுமார் 25 வயது இருக்கும் என்பதும், அவர் மேலே அணிந்திருந்த சட்டை எரிக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்த போலீசார், கொலையாளிகளின் தடயங்களை சேகரித்தனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையான நபர் யார்? என்பது குறித்தும், அவர் கொலை செய்து எரித்தவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.