தென்காசி அருகே கிரஷர் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி!

 
dead

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கிரஷர் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டவிளைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி (40). இவர் ஆழ்வார்குறிச்சியை அடுத்த கீழஆம்பூர் சாலையில் உள்ள தனியார் எம்.சாண்ட் நிறுவனத்தில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஸ்ரீராம் (12), ராகிணி (12) என்ற இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.இந்த நிலையில், நேற்று மாலை நிறுவனத்தில் பாறைகளை துகளாக்கும் கிரஷர் இயந்திரத்தின் அருகில் நின்று மாடசாமி வேலை செய்து கொண்டிருந்தார்.

tenkasi ttn

அப்போது, எதிர்பாராத விதமாக கிரஷர் இயந்திரத்தில் சிக்கிய மாடசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாடசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.