விளாத்திகுளத்தில் வைப்பாற்றில் தவறி விழுந்து பெண் பலி!

 
drown

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் வைப்பாற்றில் தவறி விழுந்து பெண், மகளின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பர நகர் பகுதியில் வசித்து வருபவர பால்ராஜ். இவரது மனைவி ரேச்சல் (42). இவர்களுக்கு கிருபா, ஜெசிந்தா உள்ளிட்ட 5 மகள்கள் உள்ளனர்.  மூத்த மகளான கிருபாவுக்கு கடந்த 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.  இந்த நிலையில், நேற்று காலை ரேச்சல், தனது இளைய மகளான ஜெசிந்தாவுடன் சிதம்பர நகரில் உள்ள வைப்பாறு ஆற்றுப் பகுதிக்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது, ரேச்சலுக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இனதால், அவர் வைப்பாற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடினார். 

drowning

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரேச்சலின் மகள் ஜெசிந்தா, அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்து தாயை காப்பாற்றும் படி கூறினார். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் தண்ணீரில் கிடந்த ரேச்சலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.