காய்ச்சலுக்கு ஊசிபோட்ட இளைஞர் பலியான விவகாரம்… தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை சீல்…

 

காய்ச்சலுக்கு ஊசிபோட்ட இளைஞர் பலியான விவகாரம்… தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை சீல்…

விருதுநகர்

ராஜபாளையம் அருகே காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்தவர் முகேஷ் (24). இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அங்குள்ள கூட்டுறவு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி போட்டபோது, மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், முகேஷ் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

காய்ச்சலுக்கு ஊசிபோட்ட இளைஞர் பலியான விவகாரம்… தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை சீல்…

இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரன், இன்று சம்பந்தப்பட்ட தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த சோதனையின்போது, மருத்துவமனை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், ஹோமியோபதி சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுவிட்டு, நோயாளிகளுக்கு ஆங்கில முறையிலான சிகிச்சையை அளித்து வந்ததும், அதற்காக மருத்துவரும், செவிலியரும் உரிய பயிற்சியை பெற்றிருக்க வில்லை என்பதும் தெரியந்தது. இதனை அடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தனர்.