சாத்தூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பணம், நகை கொள்ளை… முன்னாள் காவலர் கைது

 

சாத்தூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பணம், நகை கொள்ளை… முன்னாள் காவலர் கைது

விருதுநகர்

சாத்தூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடிய முன்னாள் காவலரை போலீசார் கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (35). லோடு வேன் ஓட்டுநர். இவரது மனைவி சங்கீதா (30). நேற்று முன்தினம் பாண்டியன் வெளியூக்கு சென்ற நிலையில், சங்கீதா தீப்பெட்டி ஆலைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். பணி முடித்து திரும்பியபோது, வீடு திறந்து கிடப்பதை கண்டு சங்கீதா அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்றபோது, பீரோ உடைக்கப்பட்டு 1.5 கிராம் தாலி, ரூ.4,500 ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது.

சாத்தூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பணம், நகை கொள்ளை… முன்னாள் காவலர் கைது

இதேபோல, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயலட்சுமியின் (29) வீட்டின் கதவை உடைத்து ரூ.400 பணம் திருடு போனதும் தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்கள் சாத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீஸார் விசாரித்தபோது சாத்தூர் கான்வென்ட் தெற்கு தெருவில் கருப்பசாமி (37) என்பவரது வீட்டிலும் ரூ.3,500 பணம் திருடு போனது தெரியவந்தது. இந்த நிலையில், அந்த பகுதியில் சந்தேகப்படும் விதமாக நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அந்த நபர் திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் (29) என்பதும், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த இவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கடந்த 2019ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும், 3 வீடுகளில் நகை மற்றும் பணம் திருடியதை ஒப்புக்கொண்டதை இதையடுத்து, கற்குவேல் மீது வழக்குப்பதிவு செய்து, போலீஸார் தொடர்ந்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.