கொரோனாவால் மனைவி இறந்ததால், அதிர்ச்சியில் தனியார் நிறுவன ஊழியர் பலி!

 

கொரோனாவால் மனைவி இறந்ததால், அதிர்ச்சியில் தனியார் நிறுவன ஊழியர் பலி!

வேலூர்

வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவி இறந்ததால், அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (51). தனியார் பேருந்து நிறுவன ஊழியர். இவரது மனைவி லதா (49). லதாவிற்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

கொரோனாவால் மனைவி இறந்ததால், அதிர்ச்சியில் தனியார் நிறுவன ஊழியர் பலி!

அங்கு லதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகேயனுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்படவே, அவரும் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த லதா, கடந்த 22ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவியின் இறப்பால் கார்த்திகேயனின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், நேற்று முன்தினம் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.