வரத்து குறைவால் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு... கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை!

 
tomotto

கனமழை எதிரொலியாக வரத்து குறைந்ததால் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது. மேலும், ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையான வ.உ.சி பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு மற்றுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளான தாளவாடி, ஆசனூர், கர்நாடகா, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகப்படியான தக்காளி பெட்டிகள் விற்பனைகாக கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே பெய்துவரும் கனமழை காரணமாக நேதாஜி காய்கறி சந்தைக்கு தக்காளி பெட்டிகள் வரத்து குறைந்து உள்ளது. நாள் ஒன்றுக்கு 10 டன் முதல் 15 டன் வரை தக்காளிகள் விற்பனை கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது மழையின் காரணமாக 2 டன்னில் 3 டன் மட்டுமே கொண்டு வரப்படுகிறது.

tomotto

மேலும், வரக்கூடிய தக்காளி பெட்டிகள் மழையின் காரணமாக அதிக விலை ஏற்றுத்துடன் கொண்டு வரப்படுகிறது. கடந்த 1 மாதத்திற்கு முன்னர் தக்காளி 1 கிலோ ரூ.10 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடும் மழையின் காரணமாக வரத்து குறைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தக்காளி பெட்டிகள் ரூ.2,500 வரையும் 1 கிலோ தக்காளி 120 முதல் 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம், வெளியிடங்களில் சில்லரை விற்பனையில் கிலோவுக்கு ரூ.140 வரை தக்காளி விற்கப்படுகிறது. உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்கப்படுகிறது. 

மேலும் வழக்கமாக 10 முதல் 15 வண்டிகளில் தக்காளி லோடுகள் வருகின்ற சூழலில் தற்போது குறைவான லோடுகளே வருவதாகவும் அதிக விலை ஏற்றத்தின் காரணமாக பொது மக்கள் குறைவாக தக்காளியை வாங்கிச் செல்கின்றனர். தற்போது கனமழை பெய்து வருவதால் தக்காளி செடிகள் நீரில் மூழ்கி அழுகிவிட்டன. இதனால் இன்னும் ஒரு மாதத்திற்கு தக்காளி விலை உச்சத்தில் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதுதவிர கனமழை காரணமாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. 

tomotto

இதனால் காய்கறி விலையும் கிலோவுக்கு ரூ 5 முதல் 10 வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.120, ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.130, முள்ளங்கி - ரூ.100, புடலங்காய் ரூ.80, பாவைக்காய் ரூ.80, கேரட் ரூ.55, பீன்ஸ் ரூ.60, பீட்ரூட் ரூ.40, பட்டா அவரைக்காய் ரூ.110, கருப்பு அவரைக்காய் ரூ.130 போன்ற விலைக்கு விற்கப்பட்டது. காய்கறி விலை உயர்ந்துள்ளதால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.