ஈரோடில் நேற்று 2-வது நாளாக 447 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்!

 
vaccine

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக 447 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி விறு விறுப்புடன் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழ அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வத்தை கூட்டும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் இதுவரை 7 கட்ட தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. நேற்று 8-வது கட்டமாக 436 மையங்களில் கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாம் நடந்தது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

vaccine

இதில் 2ஆம் தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாநகர் பகுதியில் 5 ஆயிரம் பேர் மாபெரும் தடுப்பூசி முகாமில் பங்கேற்று தடுப்பூசியை செலுத்தி கொண்டு உள்ளனர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாவட்டம் முழுவதும் 447 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் போடும் பணி தொடங்கி நடைபெற்றது.  ஞாயிறு விடுமுறை நாள் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி முகாமில் பங்கேற்று தடுப்பூசி போட்டு வருகின்றனர். 

மாநகரில் பகுதியில்  50 இடங்களில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடந்தது. இதுபோக 40 நடமாடும் வாகனம் மூலம்  இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. நேற்று 61 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. தடுப்பூசி போடும் பணியில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.