வாடிப்பட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு!

 
vadipatti cctv

வாடிப்பட்டியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

மதுரையை சேர்ந்த தியானேஷ் என்ற கல்லூரி மாணவர், தனது நண்பருடன் வாடிப்பட்டியில் இருந்து மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வாடிப்பட்டி பழைய நீதிமன்றம் அருகே சென்றபோது எதிரே வாடிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது.

cctv

இந்த விபத்தில், கல்லூரி மாணவர் தியானேஸ், அவரது நண்பர் மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த  தேச புனிதன், சந்திரன் ஆகிய 4 பேரும் சாலையில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த விபத்து சம்பவம் அங்குள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.