வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து, காங்கிரஸ் நிர்வாகி பலி!

 

வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து, காங்கிரஸ் நிர்வாகி பலி!

தூத்துக்குடி

கோவில்பட்டியில் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து காங்கிரஸ் நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகரை சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்ததார். இவருக்கு ஜோதிலெட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில், சந்திரமோகன், நேற்று கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பன் நாடார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில், வாக்களித்து விட்டு வெளியே வந்தார்.

வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து, காங்கிரஸ் நிர்வாகி பலி!

அப்போது, திடீரென மயங்கி கீழே சரிந்தார். இதனால் அருகில் இருந்தவர்கள், சந்திரமோகனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் சோகத்தில் மூழ்கினர்.

தகவல் அறிந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, சந்திரமோகன் குடும்பதினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.