ஸ்ரீரங்கத்தில் தாயார் திருவடி சேவை – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நவராத்திரி உற்சவவிழா 9-நாட்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

ஸ்ரீரங்கத்தில்  தாயார் திருவடி சேவை – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீரங்கத்தில்  தாயார் திருவடி சேவை – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீரங்கத்தில்  தாயார் திருவடி சேவை – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நவராத்திரி விழாவின் 7ம்நாளான நேற்று மாலை ஸ்ரீதாயார் திருவடி சேவை நடைபெற்றது. இதையொட்டி ரெங்கநாயகி தாயார் மாலை மூலஸ்தானத்திலிருந்து வெண்பட்டு உடுத்தி, கிளிமாலை, ஏலக்காய் ஜடை மாலை மற்றும் ஆபரணங்கள் சூடியபடி தங்க பல்லக்கில் புறப்பட்டு கண்ணாடி அறைக்குச் சென்று, அரையர்கள் சேவைகண்டு பின்னர் தங்கமுலாம் பூசப்பட்ட கொலுமண்டபத்தில் பொற்பாதங்கள் தெரிய எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்துவருகிறார்.

ஸ்ரீரங்கத்தில்  தாயார் திருவடி சேவை – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீரங்கத்தில்  தாயார் திருவடி சேவை – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வருடத்திற்கு ஒருமுறை நவராத்திரி 7ம்நாள் மட்டுமே தாயாரின் திருவடியைக் காணமுடியும் என்பதுமட்டுமன்றி, திருவடியை பக்தர்கள் சேவித்தால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், செல்வ வளம்பெருகும் என்பது ஐதீகம். மேலும் வேறு எந்த ஆலயங்களிலும் இல்லாதவாறு தாயார் திருவடி சேவை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நடைபெறுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று தாயாரின் திருவடிசேவையை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்திதனர் மேற்கொண்டிருந்தனர்.