கொரோனா அச்சம் – கார் ஓட்டுநர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை!

 

கொரோனா அச்சம் – கார் ஓட்டுநர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை!

திருச்சி

மணப்பாறை அருகே கொரோனா அச்சம் காரணாமாக கார் ஓட்டுநர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அனுக்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமணி. இவர் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு பிச்சைமணிக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.

கொரோனா அச்சம் – கார் ஓட்டுநர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை!

இதனால் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதோ? என அவர் அச்சமடைந்து உள்ளார். நோயில் இருந்து மீள முடியாது எண்ணிய பிச்சைமணி, நேற்றிரவு வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் கழுத்து, கைகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உறவினர்கள் தேடி சென்றபோது, தோட்டத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.