சர்ச்சை ஆடியோ – திமுக நிர்வாகியை கண்டித்து, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சர்ச்சை ஆடியோ – திமுக நிர்வாகியை கண்டித்து, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி

குறிப்பிட்ட சமுதாய பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து, திருச்சியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சர்ச்சை ஆடியோ – திமுக நிர்வாகியை கண்டித்து, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளவர் காடுவெட்டி தியாகராஜன். இவர் குறிப்பிட்ட சமுதாய பெண்கள் குறித்தும், காவல்துறையினர் குறித்தும் இழிவாக பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், காடுவெட்டி கிராம நிர்வாக அதிகாரி புகாரின் பேரில், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த சமுதாய தலைவர்களிடம் காடுவெட்டி தியாகராஜன் கண்ணீர் மல்க மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

சர்ச்சை ஆடியோ – திமுக நிர்வாகியை கண்டித்து, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், இந்த விகாரத்தை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாசாலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு, தியாகராஜனை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக அண்ணாசாலை முதல் மாம்பழச்சாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.