ஆம்பூர் அருகே விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி – இருவருக்கு தீவிர சிகிச்சை!

 

ஆம்பூர் அருகே விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி – இருவருக்கு தீவிர சிகிச்சை!

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே தனியார் தோல் தொழிற்சாலை கழிநீர் யுதொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள பெரிய வரிகம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோல் பதனிடும் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையின் கழிவுநீர் தொட்டியை தூய்மை செய்யும் பணியில் இன்று காலை ரமேஷ், பிரசாத், ரத்தினம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

ஆம்பூர் அருகே விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி – இருவருக்கு தீவிர சிகிச்சை!

அப்போது, எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கி மூவரும் மயங்கி விழுந்தனர். இதனால் அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ரத்தினம், பிரசாத் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களில் ரத்தினம் உடல்நிலை கவைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். தகவல் அறிந்த உமாராபாத் போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரியவரிகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.