நண்பனை கொல்ல திட்டம் தீட்டிய 2 இளைஞர்களை கொன்று உடலை பாலாற்றில் வீசிய கும்பல்!

 
arrest

காட்பாடி அருகே நண்பனை கொலை செய்ய திட்டமிட்ட 2 இளைஞர்களை கொன்று, கல்லை கட்டி பாலாற்றில் வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம்  காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர்வர்கள் நேசகுமார்(24) மற்றும் விஜய் என்ற செந்தில்குமார்(23). நண்பர்களான இருவரும் கடந்த 10ஆம் தேதி வீட்டில் இருந்து சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவர்களது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் நேசகுமாரின் நண்பரான விருதம்பட்டு பகுதியை  பாலா என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

murder

அப்போது, பாலா, தனது நண்பர்களான ஆகாஷ்(19), சரத்(19) உள்ளிட்டோருடன் சேர்ந்து நேசகுமார் மற்றும் விஜயை கொலை செய்து இருவரது உடல்களையும் கல்லைக்கட்டி பாலாற்றில் வீசியதாக தெரிவித்தனர். மேலும், விசாரணையில்  பாலாவின் நண்பரான கவுதம் என்பவருக்கும், நேசகுமாருக்கும் இடையே யார் பெரிய ரவுடி என்பது தொடர்பாக மோதல் இருந்து வந்துள்ளது. தற்போது ஆட்கடத்தல் வழக்கில் சிறையில் இருந்து வரும் கவுதம், வெளியே வந்ததும் அவரை கொலை செய்யப்போவதாக நேசகுமார் தெரிவித்து வந்துள்ளார். இதனை அறிந்த பாலா, தனது நண்பனை காப்பாற்றுவதற்காக நேசகுமாரை கொலை செய்ய தீர்மானித்துள்ளார். 

இதற்காக சம்பவத்தன்று விருத்தம்பட்டு பாலாற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு மதுஅருந்த நேசகுமாரை வரவழைத்த பாலா மற்றும் அவரது கூட்டாளிகள் உடன் சென்ற விஜயையும் கொலை செய்து, இருவரது உடல்களையும் கல்லைக்கட்டி பாலாற்றில் வீசியதாக கூறினர். இதனை அடுத்து, பாலாவின் கூட்டாளிகள் ஆகாஷ் மற்றும் சரத் ஆகியோரை கைதுசெய்த போலீசார், தப்பியோடிய சாண்டில்யன், நவீன்குமார், சந்தோஷ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், ஆற்றில் வீசப்பட்ட இருவரது உடல்களையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.