வாசுதேவநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி!

 

வாசுதேவநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி!

தென்காசி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் தேவதானம் பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. விவசாயி. இவரது மனைவி தவமணி (46). இவர் நேற்று தனது மகன் இசக்கி ராஜாவுடன், தென்காசி மாவட்டம் புளியரையில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை அடுத்த ஆத்துவழி பெட்ரோல் பங்க் அருகே சென்றுகொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே திடீரென நாய் குறுக்கே வந்துள்ளது.

வாசுதேவநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி!

அதன் மீது மோதாமல் இருப்பதற்காக இசக்கிராஜா வாகனத்தை திடீரென பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது, எதிர்பாராத விதமாக பின்னால் அமர்ந்திருந்த தவமணி, நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்றிரவு தவமணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.