மது அருந்துவதை தாய் கண்டித்ததால், கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

 

மது அருந்துவதை தாய் கண்டித்ததால், கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

தென்காசி

தென்காசி அருகே மது பழக்கத்தை தாய் கண்டித்ததால் மனைமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அடுத்துள்ள சிவகுருநாதபுரம் திருமலையாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் பூபதிராஜா (21). கட்டிட தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை கைவிடும் படி அவரது தாய் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இது தொடர்பாக, தாய் – மகன் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அவர் கடந்த 1 வாரமாக வீட்டிற்கு பணம் ஏதும் கொடுக்காமல் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்துள்ளார்.

மது அருந்துவதை தாய் கண்டித்ததால், கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் தாயாருடன் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, மாடிக்கு தூங்குவதாக கூறி சென்ற பூபதி ராஜா, அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் கீழே வராததால் பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, பூபதிராஜா தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.