பிள்ளைகள் கவனிக்காததால், காங்கிரஸ் பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை!

 

பிள்ளைகள் கவனிக்காததால், காங்கிரஸ் பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை!

தென்காசி

தென்காசி அருகே கவனிக்க யாரும் இல்லாததால் காங்கிரஸ் பிரமுகர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்கு சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சங்கிலி மகன் வைரவன். காங்கிரஸ் பிரமுகர். இவரது மனைவி சுப்புலட்சுமி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டார். இவரது மகன் வேல்முருகன், மகள் சித்ரா ஆகிய இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் தனிமையில் வசித்து வந்த வைரவன், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.

பிள்ளைகள் கவனிக்காததால், காங்கிரஸ் பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை!

மேலும், தன்னை கவனிக்க யாரும் இல்லை என மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்வில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வைரவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம், குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.