காதலனிடம் பேச முடியாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

 
suicide

கோவையில் பிறந்த நாளின்போது காதலனிடம் பேச முடியாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை இருகூரை ராம் நகர் 5வது வீதியை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி ராம்ராஜ்.  இவரது மகள் 18 வயது மகள் 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த நிலையில், சேலம் மாவட்டம் நாயக்கன்பட்டியில் உள்ள தனத தாய் வீட்டில் தங்க வைத்திருந்தார். அப்போது, அந்த பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர்,இது காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். 

coimbatore

இது குறித்து ராம்ராஜூக்கு தெரியவந்ததால் அவர் மகளை கண்டித்து, தன்னுடன் கோவைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனிடையே, மாணவியிடம் செல்போன் இல்லாததால் அவர் தனது காதலனிடம் பேச முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். நேற்று மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் பெற்றோர் புத்தாடை வாங்கி கொடுத்துள்ளனர். இதனை அடுத்து குளித்துவிட்டு வருவதாக தனது அறைக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. 

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மாணவி மின்விசிறியில் தூக்கிட்ட தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கினார். தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.