குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 
 suicide

கோவை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் கிரி நகரில் வசித்து வருபவர் சென்னையன். கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (25). இவர் குடும்ப செலவிற்காக அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அந்த கடனை லட்சுமி தான் சீட்டு போட்டு சேமித்த பணத்தில் இருந்து எடுத்து அடைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று சென்னையனுக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. கணவர் திட்டியதால் லட்சுமி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

coimbatore

இந்த நிலையில், வாழ்வில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த லட்சுமியின் தந்தை சண்முகம், மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.