திருச்சி மாவட்டத்தின் புதிய எஸ்.பி ஆக சுஜீத்குமார் ஐபிஎஸ் பொறுப்பேற்பு!

 
trichy sp

திருச்சி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜீத்குமார் ஐபிஎஸ் நேற்று பொறுப்பேற்று கொண்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.  

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த மூர்த்தி சில நாட்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டு, புதிய எஸ்.பி ஆக சுஜீத் குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, நேற்று அவர் முறைப்படி திருச்சி மாவட்டத்தின் புதிய எஸ்.பி ஆக பொறுப்பேற்று கொண்டார்.  பதவியேற்றதும், தனி பார்வையாக மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது, சட்டவிரோத செயல்கள் மற்றும் நில அபகரிப்பு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

police

மாவட்டத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் விதமாக, சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது மோட்டார் வாகன வழக்குகளை அதிகளவில் பதிவு செய்யவும், மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் நபர்களுடைய வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் காவல் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார். சைபர் குற்றங்கள் மற்றும் இணைய வழி வங்கி மோசடியில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சட்டம், ஒழுங்கு நிலை நாட்டுவதிலும், குற்றத்தை கட்டுபடுத்துவதிலும், பொதுமக்களுடன் இணக்கமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

காவல் நிலையங்களில் வரப்படும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் மனு ரசீது (CSR)அல்லது வழக்குப்பதிவு (FIR)கட்டாயமாக செய்யப்பட வேண்டும் என  அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுறித்தியுள்ளார். தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.