இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், காவலர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், காவலர் பலி!

சிவகங்கை

மானாமதுரை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பரமக்குடி காவல் நிலைய காவலர் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசலை கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் கண்ணன் (33). இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து கண்ணன் பரமக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், காவலர் பலி!

மானாமதுரை அடுத்த மேலப்பசலை அருகே சென்று கொண்டிருந்தபோது கண்ணன் வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி அதிவேகமாக மோதி விபத்திற்கு உள்ளானது.இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட கண்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.