மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் சாலை மறியல்!

 
perundurai

பெருந்துறை அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல்   தொல்லை அளித்த ஆசிரியர் கைதான நிலையில், புகாரை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் சாலை மறியல் போராட்டம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் மேல்நிலைபள்ளியில் படிக்கும் மாணவிகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் ஒன்றை தெரிவித்திருந்தனர். அதில், பள்ளி உயிரியல் ஆசிரியர் திருமலைமூர்த்தி என்பவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் ஆன்லைன் வகுப்பின்போது நடனமாட செய்வது உள்ளிட்ட சீண்டல்களில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்திருந்தனர். 

அதன் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆசிரியர் திருமலைமூர்த்தி மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில்,  ஆசிரியர் திருமலைக்குமார் மீதான பாலியல் புகாரை 2 மாதங்களுக்கு முன்பே  பள்ளி தலைமை ஆசிரியர் கணேசனிடம் மாணவிகள் தெரிவித்ததாகவும், அப்போது, இந்த விவகாரம் குறித்து வெளியே தெரிவிக்க கூடாது என மாணவிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.  

peru

இதனால் ஆசிரியர் மீதான பாலியல்  மறைக்க முயன்ற தலைமை ஆசிரியர் கணேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் பள்ளி சீனாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, கோபி- சீனாபுரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனிடையே, மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் திருமலைமூர்த்தியை காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியர் கணேசனை பணியிடை நீக்கம் செய்து,  முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.