பங்குசந்தையில் நஷ்டம் – இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

 

பங்குசந்தையில் நஷ்டம் – இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

கோயமுத்தூர்

கோவையில் தொழில் நஷ்டம் காரணமாக பங்குசந்தை புரோக்கர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(32). இவர் பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பங்குசந்தை வர்த்தக நிறுவனத்தில் புரோக்கராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பங்கு சந்தை முதலீடுகளில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பங்குசந்தையில் நஷ்டம் – இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

இதனால் முதலீடு செய்தவர்களின் பணத்தை திருப்பி அளிக்க முடியாமல் அசோக்குமார் வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று ராஜாமில் பகுதியில் உள்ள அலுவலகத்தில் சென்ற அவர் அங்கு தென்னை மரத்திற்கு வைத்திருந்த விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்வற்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.