கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பிரதீப் குமார் பொறுப்பேற்பு!

 
cbe cop

கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பிரதீப் குமார் ஐபிஎஸ் நேற்று முறைப்படி பொறுப்பேற்று கொண்டார்.

கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த தீபக் தாமோர் ஐபிஎஸ், சமீபத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி ஆக சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் ஆணையராக பணிபுரிந்து வந்த பிரதீப் குமார் ஐபிஎஸ், கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

cop cbe

இதனை தொடர்ந்து, நேற்று மாலை கோவை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த பிரதீப் குமார் முறைப்படி , காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பிரதீப் குமார், கோவை மிக முக்கிய நகரம் என்றும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வித்தியாசமான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்த ஆணையர் பிரதீப் குமார், சாலை விபத்துக்களை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். மேலும், பண மோசடி, வேலை வாங்கித் தருவதாக மோசடி உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும், கோவையை அமைதியாக வைக்க சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.