நடிகர் சூர்யா மீது, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!

 
tirupattur

ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாமக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

பாமக மாநில துணை பொதுச்செயலாளர் டி.கே.ராஜா தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் புனித அடையாளமான அக்னி கலசத்தை காட்சிப்படுத்தி, ஒட்டுமொத்த சமுதாய மக்களை சாதி, வன்மம் உள்ளவர்கள் போல் காட்சிப்படுத்தி உள்ளதாகவும்,  சகோதரத்துவத்துடன் திகழும் இருளர், வன்னியர் சமூகங்கள் இடையே சாதி வன்மத்தை தூண்டி, கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக திரைப்படத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

jai-bhim-23

எனவே இந்த படத்தை தயாரித்த ஜோதிகா, நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், பாமக மாநில துணைத் தலைவர் பொன்னுசாமி, மாநில மகளிரணித் தலைவி நிர்மலா, மாநில இளைஞரணி துணைத் தலைவர் விஜயகுமார், முன்னாள் எம்எல்ஏ நடராஜ்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.