பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் கொள்ளை!

 

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் கொள்ளை!

பெரம்பலூர்

பெரம்பலூர் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் மற்றும் ரூ.38 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை வெற்றி நகரை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவர் தொழில் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூருக்கு சென்றிருந்தார். தொடர்ந்து, நேற்று காலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இப்ராகிம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் கொள்ளை!

அப்போது, மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.38 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, முகமது இப்ராகிம் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளையும் சேகரித்தனர். தொடர்ந்து, கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.