கோவை மாவட்டத்தில் யாருக்கும் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை... பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை - ஆட்சியர் சமீரன்!

 
cbe collector

கோவையில் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட 2 பேருக்கும் வீரியம் குறைவான இன்ப்லூயன்சா - ஏ வகை பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். 

கோவையில் 2 பேருக்கு பன்றி காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் நோய் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தலைவலி போன்றவை ஏற்பட்டால் மருத்துவமனையை அணுகும்படி மாநகாட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், கோவையில் டெங்கு யாருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

cbe

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் தனியார் மருத்துவமனைகளில், கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 நபர்களுக்கு பன்றி காய்ச்சல்  தொற்று ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மாவட்ட சுகாதார மருத்துவக்குழு, நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டதில், அந்த இரு நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள தொற்று வீரியம் குறைவான இன்ப்லூயன்சா - ஏ வகையே அன்றி பன்றி காய்ச்சல்() வகை அல்ல என்பது உறுதியாகி உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இன்ப்லூயன்சா தொற்று பதிவான இடங்களில், மருத்துவ முகாம் நடத்தப்பட்டு அந்தப்பகுதிகளில்  வேறு யாருக்கும் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. மழைக் காலங்களில் பரவும் தொற்று நோய்களை தவிர்க்க பொதுமக்கள் அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், அதிகம் பயன்படுத்தும் இடங்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் முதலிய தற்காப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.