நாமக்கல் அருகே காவலர் அடித்துக்கொலை – மர்மநபர்கள் வெறிச்செயல்!

 

நாமக்கல் அருகே காவலர் அடித்துக்கொலை – மர்மநபர்கள் வெறிச்செயல்!

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் நாமக்கல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. இதனிடையே ஆனந்தன், கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று மாலை கொல்லிமலை சோளங்கன்னி என்ற இடத்தில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் ஆனந்தன் சடலமாக கிடந்தார்.

நாமக்கல் அருகே காவலர் அடித்துக்கொலை – மர்மநபர்கள் வெறிச்செயல்!

இதனை கண்டு அந்த பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வாழவந்தி நாடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேர்ந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பணிக்கு செல்லாத ஆனந்தன் அடிக்கடி கொல்லிமலைக்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது. இதனால், கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதும் போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.