காலிங்கராயன் கால்வாயில் தீபத்திருவிழா... 1008 விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்திய எம்எல்ஏ சரஸ்வதி!

 
kalingarayan

ஈரோடு மாவட்டம் பவானி காலிங்காரயன் அணைக்கட்டில் நடந்த தீபத்திரு விழா நிகழ்ச்சியில் காலிங்கராயன் கால்வாய்க்கு 1008 விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.  

ஈரோடு மாவட்டம், பவானி காலிங்கராயன்பாளையம், காலிங்கராயன் அணைக்கட்டு, காலிங்கராயன் சிலை வளாகத்தில் வாய்க்கால் வழியாக வரலாறு படைத்த காலிங்கராயனுக்கு தீபத்திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் சுபி. தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

kalingarayan

தொடர்ந்து, 1008 விளக்குகள் ஏற்றி காலிங்கராயனையும், காலிங்கராயன் வாய்க்காலையும் வழிபாடு செய்தனர்.  இந்த விழாவினை காலிங்கராயன் வாய்க்கால் விவசாயிகள் மன்றம், பஞ்சலிங்கம் உழவர் மன்றம், காலிங்கராயன் பாசன சபை, காலிங்கராயன் மதகு பாசன சபை கூட்டமைப்பு, காலிங்கராயன் அறக்கட்டளை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.