ஈரோடு மாவட்ட ஆட்சியருடன், திருப்பூர் எம்.பி, சுப்பராயன் சந்திப்பு

 
erode

திருப்பூர் தொகுதி எம்.பி கணேசமூர்த்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணியை நேரில் சந்தித்து தொகுதி மக்களிடம்  பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன்,  ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்  கிருஷ்ணனுண்ணியை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது, கடந்த வாரம் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோபி நகரம், கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், அந்தியூர் மற்றும் அம்மாபேட்டை ஆகிய ஒன்றியங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தின்போது பொது மக்களிடமிருந்து வரப்பெற்ற குடிநீர், வீட்டுமனை, ஓய்வூதியம், கழிப்பறை வசதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களை சமர்பித்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

erode

இந்த சந்திப்பின்போது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், ஈரோடு தெற்கு மாவட்டப் பொருளாளர் எஸ்.டி.பிரபாகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சி.எம்.துளசிமணி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எஸ்.சின்னசாமி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் அ.கு.பரமேசுவரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.