10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை - கேரள இளைஞர் கைது!

 
arrest

கோவை அருகே 10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கேரள இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் 10ஆம் வகுப்பு மாணவி. இவர் கொரோனா விடுமுறை காரணமாக கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர், அவர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

coimbatore

அப்போது, கேரளாவில் மாணவியின் உறவினர் வீட்டின் அருகே வசிக்கும் லோகேஷ்குமார்(21) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், கடந்த 9ஆம் தேதி  கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த மாணவியை, லோகேஷ்குர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கோவை மாவட்டம் அன்னூர் விண்ணப்பள்ளியில்  உள்ள உறவினரின் வீட்டிற்கு கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து, இருவரையும் மடக்கிப்பிடித்த போலீசார், லோகேஷ் குமார் மீது குழந்தை திருமண தடுப்புச்ச ட்டம், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சிறுமியை கோவையில் உள்ள காப்பகத்தில் அனுமதித்தனர்.