அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 20 சவரன் நகைகள் கொள்ளை!

 

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 20 சவரன் நகைகள் கொள்ளை!

கரூர்

கரூரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

கரூர் மண்மங்கலம் அடுத்த மேற்கூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் கரூர் வட்டார கல்வி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவுன் (50). தளவாபாளையம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை ஆக உள்ளார். நேற்று முன்தினம் காலை லோகநாதன் வெளியே சென்ற நிலையில், பவுன் வீட்டை பூட்டிவிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 20 சவரன் நகைகள் கொள்ளை!

தொடர்ந்து, அன்று மாலை லோகநாதன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சிகுள்ளான அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 20.5 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவர், வாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து, புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.