கார்த்திகை தீப திருநாள் விழா... ஈரோட்டில் அனைத்து கோவில்களிலும் கோலாகலம்!

 
karthigai

கார்த்திகை தீப திருநாளையொட்டி, நேற்று ஈரோட்டு மகிமாலீஸ்வரர் கோவில், திண்டல் வேலாயுதசுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை மற்றும் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்றது.

lamps

நாடெங்கும் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிப் பட்டனர். தீபத் திருவிழாவையொட்டி ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை விநாயகர், சுப்பரமணியர், சோமஸ்கந்தர், கிரியாசக்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச  மூர்த்திகளுக்கு, 16 வகையான திரவியங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது.  திருக்கார்த்திகை நட்சத்திரத்தையொட்டி மூலவருக்கு அவல்பொறி சாற்றுமுறை செய்யப்பட்டது.

deepam

மாலையில் பஞ்ச மூர்த்திகளுக்கு அலங்காரமும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, கோவில்  சிவாச்சாரியார் கோவில் தீப கம்பத்தில் மஹா தீபத்தை ஏற்றினார். அதையடுத்து கோவில் முன் வைக்கப் பட்டிருந்த செக்கப்பனை கொழுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.இதேபோல், திண்டல் வேலாயுதசுவாமி கோவில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோவில், ஐயப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

deepamகோட்டை  கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் காலையில் திருமஞ்சனம் மாலையில் கோவில் தீப கம்பத்தில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. ஈரோட்டில் கார்த்திகை தீபம் ஏற்றியதும் மழை பெய்யத்தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. ஈரோட்டில் முக்கிய கோவில்களில் ஒன்றான ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடப்பதால் அங்கு  கார்த்திகை தீப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.