குமரி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி… பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு!

 

குமரி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி… பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு!

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் தக்கலை அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குன்னம்பாறை பகுதியை சேர்ந்தவர் விஜின் (30), கொத்தனார். இவர் கடந்த திங்கள் கிழமை மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தக்கலை அருகேயுள்ள அழகிய மண்டபம் பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை விஜின், முந்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

குமரி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி… பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு!

அப்போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்தது. இதில் வாகனத்துடன் சுமார் 10 அடி தூரத்திற்கு சாலையில இழுத்துச் செல்லப்பட்ட விஜின், படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள மீட்டு உடனடியாக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விஜினை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தக்கலை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், விபத்து குறித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது