குமரி மாவட்டத்தில் தொடர் மழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

 

குமரி மாவட்டத்தில் தொடர் மழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மழை நீடித்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.06 அடியாக உயர்ந்த நிலையில், அணைக்கு வினாடிக்கு 761 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

இதேபோல், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.05 ஆக உயர்ந்த நிலையில், அணைக்கு வினாடிக்கு 836 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. மேலும், சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 16.30 அடியாகும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 16.40 அடியாகும் உயர்ந்துள்ளன.

குமரி மாவட்டத்தில் தொடர் மழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

இதனையடுத்து, நேற்று முதல் பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 2,263 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 1,981 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கோதையாறு, பரளியாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கோதையாற்ற்ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.