குமரி மாவட்ட கோவில்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது… ரூ.8.60 லட்சம் பொருட்கள் பறிமுதல்!

 

குமரி மாவட்ட கோவில்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது… ரூ.8.60 லட்சம் பொருட்கள் பறிமுதல்!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட கோவில்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை கைதுசெய்த தனிப்படை போலீசார், அவரிடம் இருந்து ரூ.8.60 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனை அடுத்து, கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், குளச்சல் உட்கோட்ட டிஎஸ்பி தங்கராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

குமரி மாவட்ட கோவில்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது… ரூ.8.60 லட்சம் பொருட்கள் பறிமுதல்!

இந்த நிலையில், குருந்தன்கோடு ஆசாரிவிளை சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார், சந்தேகத்தின் பேரில் சரல் பகுதியை சேர்ந்த அனிஷ்ராஜ் (33) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், அவர் மீது இரணியல் காவல் நிலையத்தில் 10, மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் 4 வழக்குகள் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 20 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து, கொள்ளையன் அனிஷ்ராஜை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 600 கிலோ வெண்கல பொருள்கள், 16 கிராம் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரொக்கப் பணம் என மொத்தம் ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றாவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.