கொடுமுடி அருகே போர்வையில் தீப்பற்றியதில் மூதாட்டி உடல் கருகி பலி!

 
fire

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிம்னி விளக்கு போர்வையில் பற்றி தீபற்றியதில் மூதாட்டி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி பாப்பாத்தி என்கிற பாப்பாள் (80). இவர் அந்த பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மூதாட்டி பாப்பாள் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். வெளிச்சம் வருவதற்காக கட்டிலுக்கு அடியில் சிம்னி விளக்கை பற்ற வைத்து இருந்தார்.

erode gh

அப்போது, எதிர்பாராத விதமாக பாப்பாளின் போர்வையில் சிமினி விளக்கு பட்டு,  தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தில் பார்ப்பாள் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரை அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பாப்பாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தூங்கியபோது போர்வையில் தீப்பற்றியதில் மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.