கொடைக்கானல் அடுக்கம் சாலையில் உண்டு விழுந்த ராட்சத பாறை

 
dgl

கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் அடுக்கம் சாலையில் கனமழையால் ராட்சத பாறை உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் செல்லும் அடுக்கம் சாலையில், கடந்த தென்மேற்கு பருவமழையின்போது பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து அந்த சாலையில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், உள்ளூர் மக்கள் மட்டும் அந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கொடைக்கானல் பெருமாள்மலையில் இருந்து அடுக்கம் செல்லும் சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தன. மேலும், 2 இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. 

dindigul
சாலையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாததால் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அடுக்கம், பாலாமலை, சாமக்காட்டு பள்ளம் ஆகிய கிராம மக்கள் தங்களுடைய விவசாய தோட்டங்ளுக்கும், விவசாய வேலைக்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.