அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்!

 
admk

அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மொடக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டை முன்னிட்டு அஇஅதிமுக மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய  இலவச கண் சிகிச்சை முகாம், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாமரைப்பாளையத்திலுள்ள தாமரை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் தாமரைப்பாளையம் , வடக்கு புதுப்பாளையம் , கோட்ட வலசு , வேலாயுதம் பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர்.

இந்த முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும், இந்த முகாமில் பொதுமக்கள் பயன்பெற ஏதுவாக அதிமுக சார்பில் வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி யூனியன் சேர்மன் கணபதி , யூனியன் துணைத் தலைவர்  மயில் சுப்பிரமணியம், முன்னாள் மொடக்குறிச்சி யூனியன் சேர்மன் பேட்டை சின்னு, கொடுமுடி  யூனியன் கவுன்சிலர் பரமசிவம்  ஆகியோர் கலந்து கொண்டனர்.