மீன்வியாபாரியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற, உணவு பாதுகாப்பு அலுவலர் கைது!

 
bribe

தேனி அல்லிநகரத்தில் அபராதம் விதிக்காமல் இருக்க மீன் வியாபாரியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டார உணவு பாதுகாப்பு அலுவலரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். 

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் திருமலைப்பாண்டி என்பவரது மீன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த வாரம், தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தரமற்ற மீன்களை  விற்பனை செய்ததாக கூறி அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருமலைப்பாண்டி, தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

arrest

அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழங்கிய ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை நேற்று திருமலைப்பாண்டி, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகத்திடம் வழங்கினார். அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த டிஎஸ்பி கருப்பையா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கையும் களவுமாக சண்முகத்தை பிடித்தனர். தொடர்ந்து, அலுவலகத்தில் வைத்து 5 மணிநேரம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், பின்னர் உணவு பாதகாப்பு அலுவலர் சண்முகத்தை கைது செய்தனர்.