கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராததால் நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை!

 
suicide

கரூர் அருகே கடன் பெற்றவர்கள் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதால் நிதி நிறுவன உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சங்கரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(38). இவர் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில், சுரேஷ்குமார் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முருகேசன், சுப்பிரமணி ஆகியோருக்கு ரூ.45 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடன் பெற்ற இருவரும் கூறியபடி பணத்தை திருப்பித்தர வில்லை என கூறப்படுகிறது.

karur

இதனால், சுரேஷ்குமார், அவர்களிடம் தொடர்ந்து பணத்தை கேட்டு வந்த நிலையில், அவர்கள் பின்னர் தருவதாக கூறி காலம்தாழ்ததி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த சுரேஷ்குமார், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வாங்கல் போலீசார், உயிரிழந்த சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக முருகேசன், சுப்பிரமணி ஆகியோர் மீது வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பெற்றவர்கள் பணத்தை திருப்பி தராததால் நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.