வடகிழக்கு பருவமழையையொட்டி ஈரோடு 46 புதூரில் காய்ச்சல் முகாம் : கலெக்டர் ஆய்வு!

 
erode

வடகிழக்கு பருவமழையை ஒட்டி, ஈரோடு மாவட்டம் 46 புதூரில் நேற்று சிறப்பு காய்ச்சல் முகாமை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி துவங்கி வைத்து, பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாவட்ட நிர்வாகத்தினால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி 46 புதூர் சக்தி கார்டன், பெரியசெட்டிபாளையத்தில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்புகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்துகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

erode

இந்த சிறப்பு காய்ச்சல் முகாமினை ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அந்த பகுதி மக்களிடம் தொடர் மழை காரணமாக, தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும், வீட்டின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவினை ஆய்வு செய்தார்.காய்ச்சல் முகாம்ஈரோடு