பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

 

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

ஈரோடு

ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி தொட்டிப்பாளைம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சீட்டாட்டம் விளையாடியவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் அதேபகுதியை சேர்ந்த திருமூர்த்தி(47), விஸ்வநாதன்(43), சுந்தரராஜன்(40), முருகேசன்(37), மற்றும் தங்கராஜ்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைதுசெய்து, அவர்களிடம் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.