ஈரோடு- பெண் எஸ்.ஐ-க்கள் பாலியல் புகார் – “விசாரணை அறிக்கை டிஜிபிக்கு அனுப்பிவைப்பு”

 

ஈரோடு- பெண் எஸ்.ஐ-க்கள் பாலியல் புகார் – “விசாரணை அறிக்கை டிஜிபிக்கு அனுப்பிவைப்பு”

ஈரோடு

பெண் எஸ்.ஐ-க்கள் பாலியல் புகார் குறித்த விசாரணை அறிக்கை தொழில்நுட்ப பிரிவு டிஜிபி-க்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளதாக, ஈரோடு மாவட்ட எஸ்.பி.
தங்கதுரை தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்ட காவல்துறை தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளர்களுக்கு, உயர் அதிகாரி ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

ஈரோடு- பெண் எஸ்.ஐ-க்கள் பாலியல் புகார் – “விசாரணை அறிக்கை டிஜிபிக்கு அனுப்பிவைப்பு”

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையில் தனிக்கமிட்டி அமைக்கப்பட்டு, புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண் உதவி ஆய்வாளர்கள், புகாருக்கு உள்ளான அதிகாரி உள்ளிட்டோரிடம் தனிக்கமிட்டியினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை நிறைவடைந்த நிலையில் இதுகுறித்து பேசிய ஈரோடு மாவட்ட எஸ்.பி தங்கதுரை, தொழில்நுட்ப பிரிவு பெண் எஸ்.ஐ.,-க்கள் அளித்த புகாரின் பேரில், ஏடிஎஸ்பி தலைமையில் அமைக்கப்பட்ட தனிக்கமிட்டியின் விசாரணை அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை அறிக்கையை, தொழில்நுட்ப பிரிவு டி.ஜி.பி-க்கு அனுப்பி வைத்துத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அத்துறை அதிகாரிகள் துறை வாரியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பார் என்றும் அதன்படி, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் தெரிவித்தார்.