ஈரோட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

ஈரோட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் மற்றும் கடத்தூரில் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததை தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த 18ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளைம் அருகே உள்ள நம்பியூர்பட்டி மணியகாரன் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஈரோட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

அதைத் தொடர்ந்து, பள்ளியில் உள்ள 253 மாணவர்கள், 26 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோன்று ஈரோடு மாவட்டம் கடத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பள்ளியில் உள்ள 210 மாணவர்கள், 30 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.