4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… உணவக ஊழியர் போக்சோவில் கைது!

 

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… உணவக ஊழியர் போக்சோவில் கைது!


ஈரோடு

அந்தியூர் பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் தேவராஜ். இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் தம்பதியரின் 4 வயது பெண் குழந்தை தனியாக விளையாடி கொண்டிருந்துள்ளது. இதனை அறிந்த தேவராஜ் சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் சிறுமி கூச்சலிட ஆரம்பித்தார்.

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… உணவக ஊழியர் போக்சோவில் கைது!

இதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, தேவராஜன் தப்பி ஓடிவிட்டார். சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மருத்துவமனைக்கு வந்த அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில் சம்பவம் குறித்து சிறுமியிடமும், அவரது பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர், வழக்கு குறித்து பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், பவானி மகளிர் போலீசார் தேவராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, இன்று காலை தவிட்டுப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த தேவராஜனை கைதுசெய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.