முழு ஊரடங்கின்போது ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட் இயங்காது - மாநகராட்சி ஆணையர் தகவல்!

 
erod voc market

வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட் இயங்காது உள்ளிட்ட எந்த மார்க்கெட்டும் செயல்படாது என மாநகராட்சி ஆணையர் சிவகுமார் தெரிவித்துள்ளார். 

ஈரோடு ஆர்.கே.வி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் கொரோனா தாக்கம் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கே 730-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பழக்கடைகளும் இயங்கி வருகின்றன. இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், காலையில் சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இங்கு கர்நாடகா, ஆந்திரா, பெல்லாரி, திருப்பூர், தாராபுரம், கிருஷ்ணகிரி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் போன்ற  பகுதியில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் வரதாகி வருகிறது. இங்க சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 டன் காய்கறிகள் விற்பனையாகி வருகிறது.

erode corporation

மற்ற இடங்களை விட இங்கு காய்கறிகள் குறைந்த விலையில் விற்பதால், இங்கு எப்போதும் சிறு வியாபாரிகள் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அத்துடன், ஒமைக்ரான் தொற்றும் அதிகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கின்போது, கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதேநேரம், அத்தியாவசிய பொருட்களான பால் மருந்தகங்கள் பெட்ரோல் பங்குகள் ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது ஈரோடு வ.உ.சி பகுதியில் இங்கும் நேதாஜி காய்கறி மார்க்கெட் அன்று ஒரு நாள் முழுவதும் இயங்காது என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார். இதை போல் மற்ற காய்கறி மார்க்கெட்டுகளும் இயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.